சீன அரசு சார் நிறுவனங்கள் முன்முயற்சியுடன் தங்கள் கையிலுள்ள உள்நாட்டு பங்குகளை அதிகரிப்பதற்குச் சீனா முழு ஆதரவளிக்கும். பங்கு மீள்கொள்முதல் மற்றும் வைத்திருப்பைத் தொடர்ந்து அதிகரித்து, அனைத்து பங்குத்தாரர்களின் உரிமை நலன்களைப் பயனுள்ளதாகப் பேணிக்காத்து பங்குச் சந்தை நிறுவனங்களின் மீதான நம்பிக்கையை வலுப்படுத்த தொடர்ந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என சீன அரசவையின் அரசுச் சொத்துக்கள் கண்காணிப்பு மற்றும் நிர்வாக ஆணையம் 8ஆம் நாள் தெரிவித்தது.
மேலும், மூலதன சந்தையின் ஆரோக்கியமான மற்றும் நிலையான வளர்ச்சியை முன்னேற்றும் வகையில், அரசு சார் நிறுவனங்களின் சந்தை மதிப்பு நிர்வாகப் பணி மீதான வழிக்காட்டலை மேயஸ்ரீம்படுத்தி, தொடர்ந்து முதலீட்டாளர்களுக்குத் தரமான முதலீட்டு இலக்குகளை அடையச் சீனா வழிநடத்தும் என்று தெரிவிக்கப்பட்டது.