சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் பொதுச் செயலாளரும், அரசுத் தலைவரும், மத்திய ராணுவ ஆணையத்தின் தலைவருமான ஷிச்சின்பிங் எழுதிய நிலைமைக்கு ஏற்று புதிய தர உற்பத்தி ஆற்றலை வளர்ப்பது என்ற கட்டுரை, நவம்பர் 16ம் நாள் ஜுயு ஷி என்ற இதழில் வெளியிடப்பட்டது.
புதிய தர உற்பத்தி ஆற்றல் என்பது, புத்தாக்கத்தின் தலைமையில், பாரம்பரிய பொருளாதார வளர்ச்சி வழிமுறை மற்றும் பாரம்பரிய உற்பத்தி ஆற்றல் பாதையை விட்டு, உயர் அறிவியல் தொழில் நுட்பம், உயர் செயல்திறன், உயர் தரம் ஆகிய சிறப்புகள் கொண்டு, புதிய வளர்ச்சி சிந்தனைக்குப் பொருந்திய முன்னேறிய உற்பத்தி ஆற்றல் வடிவமாகும்.
தொழில் நுட்பம் மற்றும் தொழிலின் புத்தாக்கம், புதிய தர உற்பத்தி ஆற்றலின் அடிப்படை வழிமுறையாகும். 15வது ஐந்தாண்டு காலத்தில், நிலைமைக்கு ஏற்ப புதிய தர உற்பத்தி ஆற்றலை வளர்ப்பதை, மேலும் முக்கிய இடத்தில் வைத்து, நவீனமயமாக்க தொழில் அமைப்பு முறையின் கட்டுமானத்தை விரைவுப்படுத்த வேண்டும் என்று இக்கட்டுரையில் வலியுறுத்தப்பட்டது.
