SIR பணி நாளையுடன் நிறைவு- 70 லட்சம் பேர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்க வாய்ப்பு

Estimated read time 1 min read

SIR பணி நாளையுடன் நிறைவு- 70 லட்சம் பேர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்க வாய்ப்புதமிழகத்தில் எஸ்.ஐ.ஆர்., எனப்படும் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்த பணியை, தேர்தல் கமிஷன் மேற்கொண்டு வருகிறது. இதன்படி, முதல் கட்டமாக வாக்காளர் கணக்கெடுப்பு பணிகள் நடந்து வருகின்றன. இதன்படி பொதுமக்கள் டிசம்பர் 11-ந் தேதிவரை கணக்கீட்டு படிவங்களை நிரப்பி சமர்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது.

இதுவரை 23 லட்சம் விண்ணப்பங்கள்... ஜனவரி -5ல் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு..

இதன்படி கடந்த நவம்பர் 4-ந் தேதி முதல் 9-ந் தேதி (நேற்று) வரை நடந்த எஸ்.ஐ.ஆர். பணிகளின் விவரங்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதில், தமிழகத்தில் உள்ள 6 கோடியே 41 லட்சத்து 14 ஆயிரத்து 587 வாக்காளர்கள் உள்ளனர். நேற்று வரை 6 கோடியே 40 லட்சத்து 84 ஆயிரத்து 624 படிவங்கள், அதாவது 99.95 சதவீதம் வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டுவிட்டது. அவற்றில் 6 கோடியே 38 லட்சத்து 25 ஆயிரத்து 877 படிவங்கள் அதாவது 99.55 சதவீதம் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், வரும்16-ந் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது. இந்த வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்து சுமார் 70 லட்சம் பேர் நீக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதன்படி, இறந்தவர்கள் 25 லட்சம், நிரந்தரமாக இடம் மாறியவர்கள் 40 லட்சம், இரட்டை பதிவுகள் 5 லட்சம் என்று 70 லட்சம் பேர் வரை வாக்காளர் பட்டியல் நீக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாக உள்ளது. வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் 16ம் தேதியில் இருந்து ஜனவரி 15-ந் தேதிவரை பெயர் சேர்க்க மற்றும் பல்வேறு திருத்தங்களை மேற்கொள்ள விண்ணப்பங்களை சமர்பிக்கலாம். இந்த ஒரு மாத காலகட்டத்தில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுமா என்பதை விரைவில் தேர்தல் ஆணையம் அறிவிக்கும். இந்த காலகட்டத்தில் பெறப்பட்ட விண்ணப்பங்களை பரிசீலனை செய்து பிப்ரவரி 14-ந் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.

Please follow and like us:

You May Also Like

More From Author