இன்று கோவாவில் பிரமாண்ட ராமர் சிலையை திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி!

Estimated read time 0 min read

தெற்கு கோவாவின் கனகோனாவில் உள்ள ஸ்ரீசமஸ்தானம் கோகர்ண பரதகலி ஜீவோட்டம் மத்தில் 77 அடியில் பிரமாண்ட ஸ்ரீராமரின் வெண்கலை சிலை நிர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கான பிராண பிரதிஷ்டை பூஜைகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இன்று பிற்பகலில் பிரதமர் மோடி, ராமர் சிலையை திறந்து வைக்க உள்ளார். அதனை தொடர்ந்து பக்தர்கள் மற்றும் விருந்தினர்களுக்கான தரிசனம் மற்றும் சபா காரியக்ரமம் நடைபெறுகிறது.

மடத்தின் 550 வது ஆண்டு விழாவை முன்னிட்டு, 77 அடி உயர ராமர் சிலை திறக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்நிகழ்வில் சுமார் ஒன்றே கால் லட்சம் பக்தர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பர்தகாலியில் உள்ள பிரதான மடத்தை மடாதிபதி புதுப்பித்து, சமஸ்கிருதத்தில் உள்ள பண்டைய மத நூல்களை ஆராய்ச்சி செய்வதற்கான இடம் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் பிரதான மட வளாகத்தில் பக்தர்கள் தங்குவதற்கு அறைகளும் கட்டப்பட்டுள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author