ஆபாச நடிகை ஸ்ட்ரோமி டேனியல்ஸ், டொனால்ட் டிரம்புடனான தனது அந்தரங்க வாழ்க்கையின் விவரங்களை ‘ஹஷ் மணி’ வழக்கு விசாரணையின் போது நீதிமன்றத்தில் பகிர்ந்து கொண்டார்.
2006 ஆம் ஆண்டு லேக் தஹோ ஹோட்டலில் வைத்து தனக்கும் டொனால்ட் டிரம்ப்புக்கும் இடையே நடந்த பாலியல் சந்திப்பை அந்த ஆபாச நடிகை விவரித்துள்ளார்.
அவரது தெளிவான மற்றும் ஆபாசம் நிறைந்த சாட்சியம் தற்போது அமெரிக்கா முழுவதும் பேசு பொருளாகியுள்ளது.
இந்த ஆண்டு நடைபெற இருக்கும் அமெரிக்காவின் அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் டொனால்ட் டிரம்ப் போட்டியிட இருக்கிறார். இந்நிலையில், அவரது தேர்தல் பிரச்சாரங்களை பாதிக்கும் வகையிலான இந்த சாட்சியம் வெளியாகியுள்ளது.