வங்கக்கடல் பகுதியில் உருவாகியுள்ள டித்வா புயல் வட தமிழகம் மற்றும் புதுச்சேரிக் கடற்கரையை நோக்கி நகர்ந்து வருவதால், சனிக்கிழமை (நவம்பர் 29) கடலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
தற்போது சென்னைக்குத் தெற்கே சுமார் 520 கிமீ தூரத்திலும், புதுச்சேரிக்கு சுமார் 440 கிமீ தூரத்திலும் மையம் கொண்டுள்ள இந்தப் புயல், வடக்கு – வடமேற்கு திசையில் மணிக்கு 10 கிமீ வேகத்தில் நகர்ந்து வருகிறது.
ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் வட தமிழகம், புதுச்சேரி மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திரப் பிரதேசக் கடற்கரையை ஒட்டி கரையை கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
கடலூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு
