அண்மைக் காலமாக ஊமுவாமுவா (Oumuamua), 2I/போரிசோவ் (Borisov), 3I/அட்லஸ் (Atlas) போன்ற விண்மீன் மண்டலங்களுக்கு இடையே பயணிக்கும் பொருட்கள் (Interstellar Objects) நமது சூரியக் குடும்பத்தைக் கடந்து செல்வது கண்டறியப்பட்டுள்ளது.
இந்த இன்டர்ஸ்டெல்லார் விண்வெளிப் பொருட்கள் பூமிக்கு ஏற்படுத்தும் தாக்கம் மற்றும் அபாயங்கள் குறித்து மிச்சிகன் மாநிலப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாரில் செலிக்மேன் தலைமையிலான புதிய அறிவியல் ஆய்வு ஒன்று ஆராய்ந்துள்ளது.
இந்த ஆய்வு, எம் நட்சத்திரங்கள் (M Stars) எனப்படும் சிகப்பு குள்ள நட்சத்திரங்களின் இயக்கத்தை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்பட்டது.
ஆய்வுக் குழு சுமார் 10 பில்லியன் மாதிரிப் பொருட்களை உருவாக்கி, அவற்றின் வேகம் மற்றும் பாதைகளைப் பகுப்பாய்வு செய்தது.
பூமிக்கு அச்சுறுத்தும் விண்கற்களின் ஆபத்து குறித்து புதிய ஆய்வில் தெரிய வந்த தகவல்
