நாட்டில் தொடர்ச்சியாக ஏற்படும் விமான விபத்துகளை தவிர்ப்பதற்காக மத்திய விமானப் போக்குவரத்து துறை விமான நிறுவனங்களுக்கு கடும் கட்டுப்பாடுகளை விதித்தது. அதன்படி ஒரு விமானி தொடர்ச்சியாக 18 மணி நேரம் பறக்கலாம் என்ற விதி மாற்றப்பட்டு 8 மணிநேரமாக குறைக்கப்பட்டது. அதோடு வாரத்திற்கு 48 மணி நேரம் கட்டாயம் விடுமுறை வழங்க வேண்டும் என்ற புதிய விதிமுறைகள் பல அமல்படுத்தப்பட்ட நிலையில் இரண்டு வருடங்களாக இண்டிகோ அந்த விதிமுறைகளை செயல்படுத்தாததோடு குறைந்த விமானிகள் மற்றும் ஊழியர்களோடு தங்கள் சேவையை மேற்கொண்டு வந்தது.
இதனால் தற்போது இண்டிகோ விமான சேவை கடும் பாதிப்பை சந்தித்துள்ள நிலையில் தொடர்ச்சியாக ரத்து செய்யப்பட்டு வருகிறது. இன்று கூட 400 விமானங்கள் ரத்து செய்யப்பட்டது. இதன் காரணமாக பல விமான நிறுவனங்கள் விமான கட்டணத்தின் விலையை பல மடங்கு உயர்த்துவதாக புகார் எழுந்த நிலையில் மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சகம் தற்போது விமான நிறுவனங்களுக்கு 4 பிரிவுகளில் டிக்கெட் கட்டண உச்ச வரவை நிர்ணயித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அதன்படி உள்நாட்டு விமான பயணங்களில் பயணிப்பதற்கு அதிகபட்சமாக 18000 ரூபாய் வரை மட்டுமே வசூலிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதனை மீறும் விமான நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
