2026ம் ஆண்டின் பொருளாதாரப் பணிகளை ஆய்வு செய்து, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் சட்டப்படி ஆட்சி புரிவதற்கான பணி விதிகளைப் பரிசீலிக்கும் கூட்டத்தை, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி அரசியல் குழு டிசம்பர் 8ம் நாள் நடத்தியது. மத்திய கமிட்டி பொதுச் செயலாளர் ஷிச்சின்பிங் இக்கூட்டத்துக்குத் தலைமை தாங்கினார்.
கடந்த 5 ஆண்டுகளில், பல்வேறு சவால்களை எதிர்கொண்ட நிலையில் சீனாவின் பொருளாதாரம், அறிவியல் தொழில் நுட்பம், தேசிய பாதுகாப்பு, பண்பாடு, அமைப்பு முறை, தூதாண்மை முதலிய துறைகள், குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் பெற்றுள்ளன. அடுத்த ஆண்டின் பொருளாதாரப் பணிகளை, நிலையாகவும் உயர் தரம் மற்றும் பயனுடனும் புரிந்து, மேலும் ஆக்கப்பூர்வமான நிதிக் கொள்கை மற்றும் பொருத்தமான தளர்ச்சியான நாணயக் கொள்கையைத் தொடர்ந்து செயல்படுத்த வேண்டும் என்று இக்கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
கட்சியின் தலைமை, குறிப்பாக கட்சி மத்திய கமிட்டியின் மைய மற்றும் ஒருங்கிணைந்த தலைமையில் ஊன்றி நிற்க வேண்டும். சட்டபடி ஆட்சி புரிவது தொடர்பான ஷிச்சின்பிங்கின் சிந்தனையைப் பன்முகங்களிலும் செயல்படுத்தி, இதன் சரியான அரசியல் திசையைப் பற்றிக்கொண்டு, சீனத் தனிச்சிறப்பியல்பு வாய்ந்த சோஷலிச சட்ட ஒழுங்கு பாதையில் உறுதியாக நடைபோட வேண்டும் என்றும் இக்கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
