சீனாவின் சி 909 ரக 175 விமானங்கள் தற்போது வரை சந்தைக்கு வினியோகிக்கப்பட்டு, 3 கோடிக்கும் மேலான பேர், அவை மூலம் பயணித்துள்ளனர். உள்நாட்டு கிளை வழித் தட பயணியர் விமானங்களில் இந்த ரக விமானங்கள் 60 விழுக்காட்டிற்கு மேலாகும். சி 909 ரக விமானங்கள், சுமார் 20 சர்வதேச விமான வழித்தடங்களில் சேவை புரிகின்றன. இந்தோனேசியா, லாவோஸ், வியட்நாம் உள்ளிட்ட 12 நாடுகளின் 20க்கும் மேலான நகரங்கள் இதில் அடக்கம்.
இந்த ரக விமானங்கள், சர்வதேச வரையறையின்படி தற்சார்பு அறிவுசார் சொத்துரிமை கொண்ட குறுகிய மற்றும் இடைவெளி பயணியர் விமானங்களாகும். இதில் 78 முதல் 97 வரையான இருக்கைகள் உள்ளன. 2225 கிலோமீட்டர் முதல் 3700 கிலோமீட்டர் வரை செல்லக் கூடியதாக வடிவமைக்கப்பட்டது. திட்டப்படி 2016ஆம் ஆண்டின் ஜூன் திங்கள் 28ஆம் நாளில் முதல் இவ்வகை விமானங்கள் பயணம் தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
