உலகளாவிய மனித உரிமைகள் நிர்வாகம் பற்றிய மன்றக்கூட்டம் 14ஆம் நாள் புதன்கிழமை பெய்ஜிங்கில் துவங்கியது.
இந்த மன்றக் கூட்டத்திற்கு சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் அனுப்பிய வாழ்த்து கடிதத்தில் கூறுகையில்
வளர்ச்சி மூலம் மனித உரிமைகளை மேம்படுத்தி, உலகளாவிய வளர்ச்சி முன்முயற்சியை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும், தத்தமது நாட்டின் நவீனமயமாக்கல் பாதை மூலம் மக்களின் மனித உரிமைகள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும், ஒத்துழைப்பு மூலம் மனித உரிமைகளை மேம்படுத்தி, பேச்சுவார்த்தை மூலம் ஒத்த கருத்துக்களை உருவாக்கி, மனித உரிமைகள் நிர்வாகத்தின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தை அடைய வேண்டும் என்று சுட்டிக்காட்டினார்.
மக்களே முதன்மை என்பதை பின்ற்றி, சொந்த நாட்டின் நடைமுறைகளுக்கு ஏற்ற மனித உரிமைகளுக்கான வளர்ச்சி வழியில் முன்னேறி வரும் சீனா, நவீனமயமாக்கலை நனவாக்கும் போக்கில் மனித உரிமைகளின் காப்புறுதியை இடைவிடாமல் மேம்படுத்தும் என்றும் ஷிச்சின்பிங் வலியுறுத்தினார்.