செம்பரம்பாக்கம் ஏரியில் முழு கொள்ளளவு தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளதால், நந்தம்பாக்கம் பகுதியில் உள்ள குடியிருப்புகளைத் தண்ணீர் சூழ்ந்தது.
சென்னையின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் செம்பரம்பாக்கம் ஏரி முழு கொள்ளளவை எட்டியது. 24 அடி உயரம் கொண்ட ஏரியில் 3 ஆயிரத்து 645 மில்லியன் கன அடி அளவிற்கு தண்ணீர் தேக்கி வைத்துள்ளதால், ஏரியை ஓட்டியுள்ள நந்தம்பாக்கம் பகுதியில் உள்ள குடியிருப்புகளைத் தண்ணீர் சூழ்ந்தது.
இதனால், அப்பகுதியே தனித்தீவு போல் காட்சியளிக்கிறது. இதனால், பெரும்பாலான மக்கள் தங்களது உறவினர் வீடுகளில் தஞ்சமடைந்து வருகின்றனர்.
ஏரியில் இருந்து அவ்வபோது தண்ணீரை திறந்துவிட்டிருந்தால், இத்தகைய பாதிப்பு ஏற்பட்டிருக்காது என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
எனவே, ஏரியில் உள்ள நீரை வெளியேற்ற அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
