சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் டிசம்பர் 31ஆம் நாளிரவு 7 மணிக்கு, சீன ஊடக குழுமம் மற்றும் இணையத்தின் மூலம், 2026 புத்தாண்டு உரை நிகழ்த்த உள்ளார்.
சீன ஊடக குழுமத்தைச் சேர்ந்த சி.சி.டி.வி பன்நோக்க சேனல், செய்தி சேனல், சீன மொழிக்கான சர்வதேச சேனல், 4கே சேனல், சீன சர்வதேச தொலைக்காட்சியைச் சேர்ந்த வெளிநாட்டு சேனல்கள், மத்திய மக்கள் வானொலி நிலையம், சீன வானொலி நிலையம், ரென்மின் மற்றும் சிங்குவா இணையங்கள், சி.சி.டி.வியின் செய்தி செயலி உள்ளிட்ட சீன மத்திய முக்கிய செய்தி ஊடகங்களின் இணையங்கள், புதிய செய்தி ஊடகம் முதலியவற்றில் புத்தாண்டு உரை உரிய நேரத்தில் ஒளிபரப்பு மற்றும் ஒலிபரப்பு செய்யப்பட உள்ளது.
