தமிழகம் முழுவதும் சமீபகாலமாக அதிகரித்து வரும் நீண்ட கால இருமல் மற்றும் காய்ச்சலுக்கு, உருமாறிய கொரோனா வைரஸ் மற்றும் ‘H3N2’ இன்ப்ளூயன்சா வைரஸ்களே முக்கிய காரணம் என மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தற்போது பரவி வரும் பாதிப்பில், காய்ச்சல் குறைந்தாலும் கூட, சுமார் 2 முதல் 3 வாரங்களுக்கு வறட்டு இருமல் நீடிப்பதாகப் பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
இது Barking Cough எனப்படும் தீவிர இருமலாக உருவெடுத்துள்ளது.
கடந்த செப்டம்பர் மாதம் தொடங்கி இந்த வகை காய்ச்சல் மற்றும் தொடர் இருமலால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது பொது சுகாதாரத்துறை.
“இவ்வகை பாதிப்பை ஏற்படுத்துவது கொரோனா வைரஸாக இருப்பினும், அது வீரியம் குறைந்த வைரஸ் என்பதால் அச்சப்பட வேண்டியதில்லை” என அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழகத்தில் பரவும் மர்ம காய்ச்சல்: உருமாறிய கொரோனா வைரஸே காரணம்?
