மத்திய பொதுப்பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி), தான் நடத்தும் சிவில் சர்வீஸ் உள்ளிட்ட பல்வேறு போட்டித் தேர்வுகளின் நம்பகத்தன்மையை உறுதி செய்யவும், ஆள்மாறாட்டம் போன்ற முறைகேடுகளைத் தடுக்கவும் அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது.
இதன்படி, தேர்வர்களின் அடையாளத்தைச் சரிபார்க்க முக அங்கீகாரத் தொழில்நுட்பம் (Facial Recognition Technology) மற்றும் ஆதார் சார்ந்த கைரேகை சரிபார்ப்பு (Aadhaar-based Fingerprint Authentication) முறையை இனி நடைமுறைப்படுத்த உள்ளது.
இதன்படி, தேர்வு மையத்திற்குள் நுழையும் ஒவ்வொரு தேர்வரின் முகமும் இந்தத் தொழில்நுட்பம் மூலம் ஸ்கேன் செய்யப்படும்.
இது விண்ணப்பத்தின் போது சமர்ப்பிக்கப்பட்ட புகைப்படத்துடன் ஒத்துப் போகிறதா என்பதைத் துல்லியமாகச் சரிபார்க்கும்.
யுபிஎஸ்சி தேர்வுகளில் புதிய மாற்றம்: முறைகேடுகளைத் தடுக்க முக அங்கீகாரத் தொழில்நுட்பம் அறிமுகம்
