தற்போது சீனாவின் ஷாங்காய் மாநகரில் திறந்த மூல மென்பொருள் உருவாக்கும் பொறியியலாளர்களின் எண்ணிக்கை 10லட்சத்தைத் தாண்டி நாடளவில் 2ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.
செயற்கை நுண்ணறிவு, முக்கிய மென்பொருட்கள் உள்ளிட்ட முக்கிய துறைகளின் தொடரவல்ல வளர்ச்சியில் ஷாங்காய் முனைப்புடன் ஈடுபடுகிறது. உலகின் திறந்த மூல விதிமுறைகள் மற்றும் வரையறைக்கான நீண்ட பங்களிப்புக்கும் ஆதரவளிக்கும். அதோடு, இத்துறையில் நாடளவில் பயன்பாட்டு நிலையில் இருந்து வழிகாட்டல் நிலைக்கான மாற்றத்தைக் கொண்டு வரப் பாடுபடுமென ஷாங்காய் மாநகரப் பொருளாதார மற்றும் தகவல் ஆணையத்தின் தலைமை பொறியியலாளர் ஜியூவேய் தெரிவித்தார்.
தற்போது செயற்கை நுண்ணறிவுத் துறையிலுள்ள 95விழுக்காடு மென்பொருட்கள் திறந்த மூல மென்பொருட்களாகும். பங்களிப்பளவில், சீனா உலகளவில் 2ஆவது இடத்தில் இடம் பெற்று கருத்து வெளிப்பாட்டுரிமையும் இடைவிடாமல் உயர்ந்து வருகிறது.
