இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், உக்ரைன் – ரஷ்யா போர் விவகாரத்தில் இந்தியாவைக் குறிவைத்து விமர்சிக்கும் மேற்கத்திய நாடுகளுக்குத் தனது பாணியில் பதிலடி கொடுத்துள்ளார்.
சமீபத்தில் நடைபெற்ற ஒரு சர்வதேச நிகழ்வில் பேசிய அவர், உக்ரைன் விவகாரத்தில் இந்தியாவை மட்டும் தேர்ந்தெடுத்து விமர்சிப்பது நியாயமற்றது மற்றும் ஆதாரமற்றது என்று கடுமையாகச் சாடியுள்ளார்.
இந்தியாவின் இறையாண்மை மற்றும் அதன் பொருளாதாரத் தேவைகளைக் கருத்தில் கொண்டே முடிவுகள் எடுக்கப்படுவதாக அவர் மீண்டும் உறுதிபடத் தெரிவித்தார்.
‘இது நியாயமற்றது’; மேற்கத்திய நாடுகளுக்கு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் கொடுத்த நெத்தியடி பதில்
