தமிழக அரசியலில் அடுத்தடுத்த அதிரடி திருப்பங்கள் அரங்கேறி வருகின்றன. ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயல் இன்று இரவு 10.30 மணிக்கு 4 நாள் பயணமாக சென்னை வருகிறார். நாளை காலை 10 மணிக்கு கிண்டியில் உள்ள நட்சத்திர விடுதியில் தமிழக பாஜகவின் முக்கிய தலைவர்களுடன் அவர் மிக முக்கியமான ஆலோசனையில் ஈடுபட உள்ளார்.
சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில், டெல்லியில் இருந்து வரும் இந்தத் தூதுவர் என்னென்ன திட்டங்களை வகுக்கப் போகிறார். இந்த ஆலோசனைக் கூட்டத்தின் ஹைலைட்டே 22-ஆம் தேதி நடக்கப்போகும் அந்தச் சம்பவம்தான். அதிமுக மற்றும் பாஜக இடையிலான கூட்டணி ஒப்பந்தம் அன்றைய தினம் கையெழுத்தாக அதிக வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் கசிந்துள்ளன.
தொகுதிப் பங்கீடு, தேர்தல் வியூகம் என அனைத்தையும் இறுதி செய்யவே பியூஷ் கோயல் சென்னை வருவதால், தமிழக அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது. எடப்பாடி பழனிசாமி மற்றும் பாஜக தலைவர்கள் சந்திப்பில் என்னென்ன முடிவுகள் எடுக்கப்படும் என்பதைப் பார்க்க ஒட்டுமொத்த தமிழகமே ஆவலோடு காத்திருக்கிறது
