பெல்ஜியத் தலைமையமைச்சர் தே வீவெர் ஜுலை முதல் நாள் பிரசல்ஸில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி அரசியல் குழு உறுப்பினரும் வெளியுறவு அமைச்சருமான வாங் யீயைச் சந்தித்து பேசினார்.
தே வீவெர் கூறுகையில், பெல்ஜிய-சீன பரிமாற்றம் நீண்டகால வரலாறுடையது. தற்போது சிக்கலான புவிசார் அரசியலை எதிர்நோக்கி, இரு தரப்பும் பரிமாற்றத்தை வலுப்படுத்தி, ஒன்றுக்கொன்று நம்பிக்கையை அதிகரிக்க வேண்டும் என்றும், ஐரோப்பிய-சீன தலைவர்களின் சந்திப்பில் ஆக்கப்பூர்வ சாதனைகள பெறப்படும் என எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.
வாங் யீ கூறுகையில், ஐரோப்பியாவின் ஒருமைப்பாட்டுப் போக்கிலும், சீன-ஐரோப்பிய பரிமாற்றத்திலும் பெல்ஜியம் சிறப்பாக பங்காற்றி வருகிறது. பெல்ஜியத்துடன் பாரம்பரிய நட்புறவை முன்னெடுத்துச் செல்ல சீனா விரும்புகிறது என்று தெரிவித்தார். உயர் தர வளர்ச்சியிலும் உயர் நிலையிலான திறப்பிலும் சீனா ஊன்றி நின்று, மேலதிக பெல்ஜிய தொழில் நிறுவனங்கள் சீனாவுக்கு வந்து தொழில்களை நடத்த வரவேற்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.