மனிதர்களின் இனிமையான எதிர்காலம் என்ற தலைப்பில் உலக செயற்கை நுண்ணறிவு திரைப்பட சேகரிப்பு நடவடிக்கை அமெரிக்காவில் துவங்கியது.
சீன ஊடகக் குழுமமும், அமெரிக்க நியூயர்க் திரைப்பட கழகமும் இணைந்து இந்நடவடிக்கையை கூட்டாக மேற்கொண்டன. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பரப்புரைத் துறை துணை அமைச்சரும் சீன ஊடகக் குழுமத்தின் இயக்குநருமான ஷேன் ஹெய்சியுங் எழுத்து மூல உரை நிகழ்த்தினார்.
அப்போது அவர் கூறுகையில்,
செயற்கை நுண்ணறிவு பற்றி சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங்கின் உரையை வழிக்காட்டலாக கொண்டு, சீன ஊடகக் குழுமம், முதன்முறையாக செயற்கை நுண்ணறிவு அம்சங்களை பெருமளவில் உருவாக்கியுள்ளது.
இதில் புதிய உயர் தர உற்பத்தி திறனைப் பயன்படுத்தி, எதிர்கால கலை நிகழ்ச்சி மற்றும் பண்பாட்டு பரவலுக்கான வாய்ப்புகளைத் திறந்துள்ளது. உலக இளைஞர்கள், திரைப்படத் துறையை மேடையாகக் கொண்டு, செயற்கை நுண்ணறிவு மூலம், பல்வகை பண்பாடுகளைக் கொண்ட உலகத்தை உருவாக்குவார்கள் என சீன ஊடகக் குழுமம் எதிர்பார்க்கிறது என்றார்.