சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டிப் பொது செயலாளரும், அரசுத் தலைவருமான ஷிச்சின்பிங் சீனாவில் அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ள லாவோஸ் மக்கள் புரட்சிக் கட்சியின் மத்திய கமிட்டிப் பொது செயலாளரும், அரசுத் தலைவருமான தோங்லூன் உடன் ஜூன் 5ஆம் நாள் மாலை மக்கள் மாமண்டபத்தில் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது ஷிச்சின்பிங் குறிப்பிடுகையில், அண்டை தூதாண்மையுறவுகளில் லாவோஸை முக்கிய திசையாகச் சீனா எப்போதும் கருதி வருகிறது. லாவோஸ் சொந்த நிலைமைக்கிற்குப் பொருத்தமான சொஷலிச பாதையில் வளர்வதற்குச் சீனா உறுதியாக ஆதரவளிக்கும். லாவோஸுடன் இணைந்து பாரம்பரிய நட்புறவைத் தொடர்ந்து ஒன்றுக்கொன்று நலன் தரும் ஒத்துழைப்பை மேலும் ஆழமாக்கி ஒற்றுமை மற்றும் ஒருங்கிணைப்பை நெருக்கமாக்க வேண்டும் என்றும், சீன-லாவோஸ் உறவின் புதிய வளர்ச்சியை முன்னேற்றி புதிய யுகத்தில் அனைத்து காலங்களிலும் சீன-லாவோஸ் பொது எதிர்கால சமூகத்தைக் கூட்டாக கட்டியமைக்க வேண்டும் என்றும் சீனா விரும்புவதாகத் தெரிவித்தார்.
மேலும், இரு நாட்டுறவு மற்றும் இரு நாடுகளின் பொது எதிர்கால சமூகத்தின் கட்டுமானத்தை உயர் வரையறை, உயர் தரம் மற்றும் உயர் நிலையாக முன்னேற்றுவது குறித்து ஷிச்சின்பிங் 4 முன்மொழிவுகளை முன்வைத்தார்.
முதலாவது, சொஷலிய திசையில் ஊன்றி நிற்க வேண்டும். இரண்டாவது, ஒன்றுக்கொன்று நலன் தரும் ஒத்துழைப்பு என்ற அடித்தளத்தை வலுப்படுத்த வேண்டும். மூன்றாவது, மக்களின் பாரம்பரிய நட்பை வலுபடுத்த வேண்டும். நான்காவது, வெளிப்புற கொள்கைகளின் ஒருங்கிணைப்பை உயர்த்த வேண்டும் என்று ஷிச்சின்பிங் முன்வைத்தார்.
