சென்னை அப்பல்லோவில் ஹெச். ராஜா அனுமதி…!

Estimated read time 1 min read

தமிழக பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான எச்.ராஜாவுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து, அவர் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு, மருத்துவர்கள் குழுவினர் தீவிரப் பரிசோதனைகளை மேற்கொண்டு சிகிச்சை அளித்து வருகின்றனர்.

அவருக்கு என்ன மாதிரியான உடல்நலப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறித்த அதிகாரப்பூர்வத் தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.

எச்.ராஜாவின் தற்போதைய உடல்நிலை குறித்து அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் விரைவில் முறையான மருத்துவ அறிக்கையை (Medical Bulletin) வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Please follow and like us:

You May Also Like

More From Author