“ராகுல்காந்தியால் தான் காங்கிரஸ் கட்சி அழிந்து வருகிறது”- பிரதமர் மோடி

Estimated read time 1 min read

எதிர்க்கட்சிகள் தரம் தாழ்ந்து செயல்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி குற்றஞ்சாட்டியுள்ளார்.

குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது மாநிலங்களவையில் உரையாற்றிய பிரதமர் மோடி, “தேச நலன், அடித்தட்டு மக்களின் வளர்ச்சிக்கான அறிவிப்புகள் குடியரசுத் தலைவர் உரையில் உள்ளன. வளர்ந்த நாடுகளில் வயதானவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இந்தியாவில் இளைஞர்கள் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. உலக நாடுகளின் பிரச்னைகளை தீர்க்கும் வலிமைமிக்க நாடாக இந்தியா விளங்குகிறது.இந்நூற்றாண்டின் 2ஆவது காலாண்டு இந்தியாவுக்கு உடையதாக இருக்கும். உலக பொருளாதாரத்தில் 2014இல் 11ஆவது இடத்தில் இருந்தோம்; தற்போது 3ஆவது இடத்துக்கு முன்னேற்றம் அடைந்துள்ளோம். நமது இளைஞர்களின் உரிமைகளை ஊடுருவல்காரர்கள் தட்டிப் பறிக்கின்றனர்.

பழங்குடியினரின் நிலங்களை ஊடுருவல்காரர்கள் பறித்துக் கொள்கின்றனர். இத்தனை ஆண்டுகள் அனுபவம் இருந்தும் எதிர்க்கட்சிகள் தரம் தாழ்ந்து செயல்படுகின்றன. ஊடுருவல்காரர்களை எதிர்க்கட்சிகள் பாதுகாக்கின்றனர். வாக்குவங்கி அரசியலில் ஈடுபடுவோர் நாட்டின் வளர்ச்சியை சிந்திக்கமாட்டார்கள். எதிர்க்கட்சிகள் செய்யும் தவறுகளை சரிசெய்வதிலேயே நேரம் போய்விடுகிறது. எதிர்க்கட்சிகள் பதில் சொல்லியாக வேண்டும், ஓடிவிடக் கூடாது. காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ், திமுக இடதுசாரிகள் ஆகிய கட்சிகளில் யாராவது மக்கள் வளர்ச்சி குறித்து யோசித்து இருக்கிறார்களா? வங்கித் துறைகளில் எதிர்காலத்தை கவனத்தில் கொண்டு மிகவும் புத்திசாலித்தனமான சீர்திருத்தங்களை மேற்கொண்டு இருக்கிறோம். காங்கிரஸ் ஆட்சி காலத்தில் பணக்காரர்களுக்கு மட்டுமே கொடுத்து வந்த வங்கி கடன்கள் தற்பொழுது ஏழைகளுக்கும் கிடைக்கின்றது. காங்கிரஸ் ஆட்சி காலத்தில் இருந்த பிரதமர்களை ஒப்பிடும்பொழுது நான் மிக வேகமாக செயல்படுகிறேன். LIC, SBI, HCL ஆகிய மூன்று பொதுத்துறை நிறுவனங்களும் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் கடுமையாக தடுமாறி வந்தது தற்போது இந்த மூன்று பொதுத்துறை நிறுவனங்களும் லாபகரமாக செயல்படுகிறது.

நாட்டு மக்கள் அத்தனை பேரையும் பாரமாகத்தான் காங்கிரஸ் கட்சி பார்த்தது. இந்தியர்களை அவமரியாதை செய்ததை தவிர காங்கிரஸ் வேறு எதுவும் செய்ததில்லை. அகங்காரம் கொண்ட காங்கிரஸ் கட்சியின் இளவரசர் சீக்கிய மதத்தை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரை துரோகி என அழைத்து அவமரியாதை செய்து விட்டார்.

இது சீக்கியர்கள் மீதான ராகுல் காந்தியின் வெறுப்பை காட்டுகிறது. காங்கிரஸ் கட்சியினர் துரோகிகள். மக்களவை செயல்படுவதை பார்த்து எனக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது.ராகுல் காந்தியால் தான் காங்கிரஸ் கட்சி அழிந்து வருகிறது” என்றார்.

Please follow and like us:

You May Also Like

More From Author