சீன தலைமையமைச்சர் லீச்சியாங் ஜூலை 6,7 ஆகிய நாட்களில், ரியோ டி ஜெனிரோ நகரில், பிரிக்ஸ் நாடுகளின் தலைவர்களின் 17ஆவது பேச்சுவார்த்தைக்கான 2ஆவது மற்றும் 3ஆவது காலக்கட்டக் கூட்டங்களில் பங்கெடுத்தார். பல தரப்புவாதம், செயற்கை நுண்ணறிவு, சுற்றுச் சூழல், காலநிலை மாற்றம், உலக சுகாதாரம் உள்ளிட்டவை குறித்து அவர் உரைநிகழ்த்தினார். பிரிக்ஸ் உறுப்பு நாடுகள், கூட்டாளி நாடுகள், விருந்தினர் நாடுகள், சர்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகள் முதலியோர் இதில் கலந்துகொண்டனர்.
லீச்சியாங் இதில் கூறுகையில்,
உலக வளர்ச்சி முன்மொழிவு எனும் கட்டுகோப்புக்குள், எண்ணியல் தெற்குலக சின்னத்தை உருவாக்க சீனா திட்டமிட்டுள்ளது. அடுத்த 5 ஆண்டுகாலத்தில், தெற்குலக நாடுகளுக்கு 200 முறை எண்ணியல் பொருளாதாரம் மற்றும் செயற்கை நுண்ணறிவு பயிற்சி திட்டப்பணிகளை சீனா வழங்கும் என்றார்.