சீனத் தொழில் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் டிசம்பர் 31ஆம் நாள் வெளியிட்ட தகவலின்படி, “5ஜி+ தொழில் துறை இணையம் மூலம், 512 திட்டப்பணிகளின் மேம்பாடு”பற்றிய நடைமுறை திட்டம் அண்மையில் வெளியிடப்பட்டது.
இத்திட்டத்தின்படி, 2027ஆம் ஆண்டுக்குள், “5ஜி+ தொழில் துறை இணையம்”, முக்கிய தொழில் துறைகளில் பெருமளவில் பயன்படுத்தப்படும். 10 ஆயிரம் 5ஜி தொழிற்சாலைகள் கட்டியமைக்கப்படும். அத்துடன், குறைந்தது 20 நகரங்களில் “5ஜி+ தொழில் துறை இணயைம்”சோதனை முறையில் பயன்படுத்தப்படும்.
அடுத்த 3 ஆண்டுகளில், “5ஜி+ தொழில் துறை இணையத்தின்”உயர்தர வளர்ச்சி மற்றும் பெருமளவிலான பயன்பாட்டுக்கான வழிமுறையும், 18 முக்கிய கடமைகளும் இத்திட்டத்தில் இடம்பெற்றுள்ளன.