சீன-இத்தாலி தூதாண்மை உறவு நிறுவப்பட்ட 55 ஆண்டு நிறைவை, சி.எம்.ஜியின் மானுட பரிமாற்ற நடவடிக்கை உள்ளூர் நேரப்படி ஜூன் 25ஆம் நாள் ரோமில் நடைபெற்றது.
சீன ஊடகக் குழுமத்தின் தலைவர் ஷென் ஹைய்சியோங், இத்தாலிய கல்வி அமைச்சர் வல்டிதாரா, இத்தாலிய கால்பந்து சங்கத்தின் தலைவர் கிராவினா, இத்தாலிக்கான சீனாவின் தூதர் ஜியா குயிடே, இத்தாலிய முன்னாள் துணை தலைமயமைச்சரும் பண்பாட்டு அமைச்சருமான ருட்டெல்லி, இத்தாலிய-சீன கலாச்சார ஒத்துழைப்பு அமைப்புமுறையின் இத்தாலிய ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் பண்பாட்டு அமைச்சருமான ப்ரே, இத்தாலி மற்றும் சீனாவின் அரசியல், பொருளாதாரம், கலை, விளையாட்டு, ஊடகம், திரைப்படம் உள்ளிட்ட பல்வேறு துறைகளிலிருந்து 200க்கும் மேற்பட்ட விருந்தினர்கள் இதில் கலந்து கொண்டனர்.
மேலும், அவர்களின் முன்னிலையில் பல சீன-இத்தாலிய மானிடப் பரிமாற்ற திட்டப்பணிகள் தொடங்கப்பட்டன.