2025ஆம் ஆண்டு, சீன வேளாண் மற்றும் ஊரக விவகார அமைச்சகம், தொடர்புடைய வாரியங்களுடன் இணைந்து, உயர்தர வரையறை விளை நிலக் கட்டுமானத்தை விரைவுபடுத்தி, கொள்கை மற்றும் நிதி உத்தரவாதத்தை வலுப்படுத்தி, தேசிய தானிய பாதுகாப்புக்கான நடவடிக்கையை உறுதியாக எடுத்துள்ளது.
இதன் மூலம் சீனாவின் வட கிழக்குப் பிரதேசத்திலுள்ள கருப்பு விளை நிலம், சமவெளிகள் பிரதேசங்கள், பாசனப் பகுதிகள், தானிய உற்பத்தி மற்றும் உற்பத்தி திறன் கொண்ட பகுதிகள் ஆகியவற்றில் உயர்தர வரையறை விளை நிலக் கட்டுமானம் மேற்கொண்டு வருகிறது. தொடங்க வேண்டும். சீனத் தேசியளவில் 50 இலட்சம் ஹெக்டர் உயர்தர வரையறை விளைநிலத்தின் ஆண்டின் கட்டுமானத் திட்டப்பணிகளுக்கு நிதியை இவ்வமைச்சகம் வழங்கியுள்ளது. அதே வேளையில், ஆண்டின் நடைமுறையாக்கத் திட்டங்களை பல்வேறு பிரதேசங்கள் நியாயமாக செயல்படுத்த வழிக்காட்டியுள்ளது. குறிப்பிட்ட பிரதேசங்களில் இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்பட்ட பாசன வசதிகளை வெகுவிரைவில் சீரமைத்து, விளை நிலத்திற்கான சீற்றத் தடுப்பு ஆற்றலை அதிகரிக்க வேண்டும் என்று இவ்வமைச்சகம் வற்புறுத்தி வருகிறது.
