சீன கம்யூனிஸ்ட் கட்சியை கண்டிப்பான முறையில் ஒழுங்கு செய்ய வேண்டும். புதிய யுகத்தில் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் சுய சீர்திருத்தத்தை முன்னேற்ற வேண்டும் என்று சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி அரசியல் குழுவின் 21ஆவது ஆய்வு கூட்டத்தில் சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி பொது செயலர் ஷி ச்சின்பிங் வலியுறுத்தினார்.
மேலும் உயர்வாக கவனம் செலுத்துவது, கம்யூனிஸ்ட் கட்சி பற்றிய நம்பிக்கையை வலுப்படுத்துவது, அதிகார பயன்பாட்டை ஒழுங்கு செய்வது, கண்காணிப்பை சரியாக மேற்கொள்வது, கட்சியை நிர்வகிக்கும் கடமையை நடைமுறைப்படுத்துவது ஆகியவை சீன கம்யூனிஸ்ட் கட்சியின் சுய சீர்திருத்தத்தை முன்னேற்றும் முக்கிய அம்சங்களாகும் என்றும் அவர் தெரிவித்தார்.