`அண்ணாமலை என்னிடம் சொன்னது..’- டிடிவி தினகரன் பரபரப்பு பேட்டி

Estimated read time 1 min read

விஜய், விஜயகாந்த் போல தாக்கத்தை ஏற்படுத்துவார். திமுகவிற்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்துவார் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், அண்ணாமலை என்னிடம் பேசிய போது நான் தேர்தலில் போட்டியிடவில்லை. என்டிஏ வேட்பாளர்களுக்கு தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்வேன் எனக் கூறினார். தேர்தலில் போட்டியிடாதது என்பது அவரின் தனிப்பட்ட முடிவு. இதில் அழுத்தம் ஏதும் இருக்கும் என நினைக்கவில்லை. நான் தேர்தலில் நிற்கவில்லை என்பதால் தொண்டர்கள் வருத்தப்பட்டார்கள்.

விஜய், விஜயகாந்தை போல தாக்கத்தை ஏற்படுத்துவார்.. தி.மு.க-வுக்கு பெரும் பாதிப்பாக இருக்கும். ஏற்கனவே மக்கள் திமுக ஆட்சியில் குமுறிக் கொண்டுள்ளார்கள். எனவே எல்லாமே இத்தேர்தலில் எதிரொலிக்கும். தோல்வி பயத்தில் மு.க.ஸ்டாலின் பேசுகிறார்.. இந்த தேர்தலில் நிச்சயமாக தி.மு.கவை வீழ்த்துவோம்.

தமிழ்நாட்டில் யாருக்கும் பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவி வருகிறது.30% கமிஷன் பெற்றுக்கொண்டு அனைத்து வேலைகளையும் ஆளுங்கட்சியினர் செய்கின்றனர்.

விவசாயிகள், மாற்றுத்திறனாளிகள் என திமுக ஆட்சியில் போராடாதவர்களே இல்லை. அதிமுக ஆட்சி வர வேண்டும் என்பதே எங்கள் விருப்பம். அதிமுக தலைமையில் ஆட்சி மலர வேண்டும்” என்றார்.

You May Also Like

More From Author