வந்தவாசி, ஏப் 05:
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஸ்ரீ பாரதமாதா மெட்ரிகுலேஷன் பள்ளியில், எய்டு இந்தியா திட்டம் சார்பில் டெக்னாலஜியை பயன்படுத்தி மாணவர்களுக்கு கற்பித்தல் திறன்கள் நடைபெற்றது. அடிப்படைத் திறன்களான கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் ஆகியவற்றில் சிறப்பாக செயல்பட்ட மாணவர்களுக்கு மனக்கணக்குகள், வினாடி வினா போட்டிகள் நடத்தப்பட்டு முதல் மூன்று இடத்தைப் பிடித்த மாணவர்களுக்கு சிறப்பு பரிசுகளும், மேலும் அனைத்து மாணவர்களுக்கு பரிசுப் பொருட்களும், சான்றிதழும் வழங்கப்பட்டது, இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மைய முதல்வர் முதல்வர் பா.சீனிவாசன், திட்ட மேலாளர் க.முருகன், யுரேகா ஆசிரியை சங்கரி, பள்ளி வகுப்பு ஆசிரியர், பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
