கரூர் மாவட்டத்தில் அண்மையில் நடந்த துயர சம்பவத்திற்கு பிறகு, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் கட்சியில் இருந்த பலர் விலகி, மாற்று அரசியல் கட்சிகளில் இணைந்து வருகின்றனர்.
அந்த வரிசையில், நேற்று (நவ. 16) காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஒரு முக்கிய நிகழ்வு அரங்கேறியது. குன்றத்தூர் மற்றும் மணிமங்கலம் ஊராட்சிப் பகுதிகளைச் சேர்ந்த மாற்றுக் கட்சியினர் 150 பேருடன், தவெக கட்சியைச் சேர்ந்த 40 முக்கிய நிர்வாகிகளும் தங்களை திமுகவில் இணைத்துக்கொண்டனர்.
இந்த இணைப்பு நிகழ்வானது, காஞ்சிபுரம் திமுக வடக்கு மாவட்டச் செயலாளர் அன்பரசன் தலைமையில் நடைபெற்றது. விலகிச் சென்ற தவெக நிர்வாகிகளைச் சால்வை அணிவித்து வரவேற்ற அன்பரசன், திமுகவின் உறுப்பினர் அட்டைகளையும் வழங்கினார்.
தவெகவிலிருந்து கணிசமான நிர்வாகிகள் விலகி திமுகவில் இணைந்துள்ளது, காஞ்சிபுரம் அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது. இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது வெளியாகி, இச்செய்தியை உறுதிப்படுத்தியுள்ளன.
