உயர்தர வளர்ச்சியை இலக்காகக் கொண்ட சீனாவின் 15ஆவது ஐந்தாண்டுத் திட்டம்

Estimated read time 0 min read

பிரிட்டனின் ராய்ட்டர்ஸ், சிங்கப்பூரின் லியான்ஹே சாவ்பாவ், லத்தீன் அமெரிக்க செய்தி நிறுவனம் உள்ளிட்ட வெளிநாட்டு ஊடகங்கள் வெளியிட்ட கட்டுரைகளில், 15 ஆவது ஐந்தாண்டுத் திட்ட வரைவு உயர்தர வளர்ச்சியை இலக்காகக் கொண்டு, சீனச் சோசலிச நவீனமயமாக்கலின் அடிப்படையை நனவாக்குவதற்கு உறுதியான அடித்தளத்தை அமைத்துள்ளதாகச் சமீபத்தில் நடைபெற்ற சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் அரசியல் குழுவின் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சீர்திருத்தம் மற்றும் புத்தாக்கத்தை உந்து சக்தியாகவும், மக்களின் வாழ்வாதாரத் தேவைகளை நோக்கமாகவும் கொண்டிருக்க வேண்டும் என்பதையும் இத்திட்ட வரைவு வலியுறுத்தியுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

சீனச் தேசிய புள்ளிவிவர பணியகத்தின் இணைய தளத்தில் வெளியிடப்பட்ட ஓர் அறிக்கையின்படி, 2025ஆம் ஆண்டில் சீனாவின் மொத்த பொருளாதார அளவு புதிய சாதனையை அடைந்துள்ளதோடு மூன்று முக்கியத் தொழில்களில் ஒருங்கிணைந்த வளர்ச்சி காணப்பட்டுள்ளது. இது, சீனப் பொருளாதாரத்தின் வலுவான நெகிழ்வுத்தன்மை மற்றும் வளர்ச்சிக்கான உள்ளார்ந்த ஆற்றலை காட்டி, உலகளாவிய பொருளாதார வளர்ச்சியில் நிலையான நம்பிக்கையை செலுத்துகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You May Also Like

More From Author