கார்த்தி சிதம்பரத்தின் ‘தனிக்கட்சி’ பிளான்.. தமிழக அரசியலில் அடுத்த பூகம்பம்..!! 

Estimated read time 1 min read

தமிழக காங்கிரஸ் கட்சியில் கூட்டணி மற்றும் உள்கட்சி பூசல் காரணமாகப் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திமுகவுடன் கூட்டணி தொடருமா அல்லது த.வெ.க-வுடன் கைகோர்க்குமா என்ற குழப்பம் நீடிக்கும் நிலையில், டெல்லி மேலிடத்தின் மௌனம் மூத்த தலைவர்களையே யோசிக்க வைத்துள்ளது.

குறிப்பாக, ப.சிதம்பரம், கேசி வேணுகோபால் போன்ற தலைவர்கள் திமுக கூட்டணியை வலியுறுத்தியும் ராகுல் காந்தி அதற்கு பிடிகொடுக்காமல் இருப்பது கட்சிக்குள் சந்தேகத்தை கிளப்பியுள்ளது.

ஒருவேளை திமுக போதிய இடங்களை ஒதுக்கவில்லை என்றால், த.வெ.க-வுடன் கூட்டணி வைக்கவும் டெல்லி மேலிடம் ஆலோசித்து வருவதாகத் தெரிகிறது.

இன்னொரு பக்கம், காங்கிரஸ் கட்சி உடைய வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் கசிகின்றன. கார்த்தி சிதம்பரம் தனது ஆதரவாளர்களிடம் தனிக்கட்சி தொடங்குவது குறித்துக் கருத்து கேட்டுள்ளது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்ட சில எம்.எல்.ஏ-க்கள் திமுக ஆதரவு நிலையில் இருக்கும்போது, டெல்லி மேலிடம் வேறு முடிவு எடுத்தால் கட்சி இரண்டுபடும் சூழல் உருவாகலாம். 40 இடங்களை எதிர்பார்க்கும் காங்கிரஸிற்கு, திமுக 25 இடங்களுக்கு மேல் தர முன்வராததே இந்த மோதல்களுக்கு முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுகிறது.

Please follow and like us:

You May Also Like

More From Author