1 முதல் 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டு இறுதித் தேர்வுகள் முன்கூட்டியே தொடக்கம்?  

Estimated read time 1 min read

தமிழகத்தில் சட்டப் பேரவைத் தேர்தல் நெருங்குவதைக் கருத்தில் கொண்டு, 1 முதல் 9-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆண்டு இறுதித் தேர்வுகளை ஏப்ரல் இரண்டாம் வாரத்திற்குள் முடிக்கத் திட்டமிட்டுள்ளதாகப் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் தற்போது பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.
இவை மார்ச் 26-ஆம் தேதியுடனும், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஏப்ரல் 6-ஆம் தேதியுடனும் நிறைவடைகின்றன.
வழக்கமாக 1 முதல் 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 20-ஆம் தேதிக்கு பிறகே தேர்வுகள் தொடங்கும்.
ஆனால், இந்த ஆண்டு ஏப்ரல் மூன்றாவது அல்லது நான்காவது வாரத்தில் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளதால், தேர்வுகள் முன்கூட்டியே நடத்தப்படவுள்ளன.

Please follow and like us:

You May Also Like

More From Author