இனி ஆபாசம் கிடையாது… எக்ஸ் தளத்தில் எலான் மஸ்க் எடுத்த அதிரடி முடிவு – இந்தியர்களுக்கு மட்டும் செக்…!!! 

Estimated read time 0 min read

சமூக வலைதளங்களில் மிகவும் பிரபலமான ‘எக்ஸ்’ தளத்தில், ஆபாச உள்ளடக்கங்கள் அதிகளவில் பகிரப்படுவதாகப் பயனர்கள் நீண்டகாலமாகக் கவலை தெரிவித்து வந்தனர். இந்த நிலையில், பயனர்களின் கோரிக்கையை ஏற்று இந்தியாவில் மட்டும் எக்ஸ் தளத்தில் ஆபாசப் பதிவுகள் மற்றும் வீடியோக்களுக்குத் தடை விதிக்க அந்நிறுவனம் அதிரடி முடிவெடுத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் எலான் மஸ்க் இந்தத் தளத்தைக் கைப்பற்றிய பிறகு பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வரும் நிலையில், தற்போது இந்திய அரசின் விதிகளைப் பின்பற்றும் வகையிலும், பயனர் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும் இந்த முக்கிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்தக் கட்டுப்பாடு குறித்து எக்ஸ் தளத்தின் ‘க்ரோக்’ ஏ.ஐ தொழில்நுட்பத்திடம் பயனர்கள் கேட்டபோது, இனி ஆபாச வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் இந்தியப் பயனர்களுக்குக் காட்டப்படாது என்பதை அது உறுதிப்படுத்தியதாகத் தெரிகிறது.

இதனால் உலகளவில் 586 மில்லியன் பயனர்களைக் கொண்டுள்ள இந்தத் தளத்தை, இந்தியாவில் மட்டும் சுமார் 30 மில்லியன் பேர் பயன்படுத்தி வருகின்றனர். இந்தியச் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு எடுக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கையானது, சமூக வலைதளங்களில் ஆரோக்கியமான சூழலை உருவாக்குவதோடு, இளைய தலைமுறையினரைத் தவறான வழிகாட்டுதல்களில் இருந்து பாதுகாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

Please follow and like us:

You May Also Like

More From Author