தருமபுரி மாவட்டத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்துப் பிரசாரம் செய்த தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, திமுக ஆட்சியில் ஊழல் மலிந்துவிட்டதாகக் கடுமையாகச் சாடினார்.
தருமபுரி மாவட்டத்தை வளரவிடாமல் தடுத்ததுடன், பெண்களின் அதிகாரத்தைப் பறிக்கும் வகையிலேயே திமுக செயல்பட்டு வருவதாக அவர் குற்றம்சாட்டினார். திமுக-வின் இந்த மக்கள் விரோத ஆட்சியைத் தூக்கி எறியத் தமிழக மக்கள் ஆவலோடு காத்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், 1973-ஆம் ஆண்டில் தமிழகத்திற்கு கூடுதல் மக்களவைத் தொகுதிகள் வேண்டாம் என அன்றைய முதல்வர் கருணாநிதி கூறியதையும், தற்போது முதலமைச்சர் ஸ்டாலின் அதே பாதையைப் பின்பற்றுவதையும் சுட்டிக்காட்டி அவர் விமர்சித்தார். தமிழகத்தின் அரசியல் பலத்தை திமுக குறைத்து வருவதாகச் சாடிய அண்ணாமலை, ஆளுங்கட்சியின் தில்லுமுல்லுகளைத் தடுத்து நிறுத்தி தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வாக்களிக்குமாறு தருமபுரி மக்களிடம் கேட்டுக்கொண்டார்.
