ராகுல் காந்தி கொடுத்த தேர்தல் ‘ஆஃபர்’… தேர்தல் வாக்குறுதி மழை..!!!!  

Estimated read time 0 min read

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட ராகுல் காந்தி, பொதுமக்களுக்குப் பல்வேறு கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை அள்ளி வீசியுள்ளார்.

குறிப்பாக, கல்லூரி மாணவர்களின் உயர்கல்விக்கு ஊக்கமளிக்கும் வகையில் மாதம் 2,000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என அவர் அதிரடியாக அறிவித்துள்ளார்.

இது தவிர, குடும்பத் தலைவிகளுக்கான உரிமைத் தொகையாக மாதம் 2,000 ரூபாய், மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம் 2,000 ரூபாய் நிதியுதவி எனப் பட்டியலிட்டுள்ளார்.

பெண்களின் பெயரில் முதல்முறையாகச் சொத்து வாங்கினால், அதற்கான பத்திரப்பதிவு கட்டணம் முற்றிலுமாக ரத்து செய்யப்படும் என்ற அறிவிப்பு பெண்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. ராகுல் காந்தியின் இந்த வரிசைக்கட்டிய வாக்குறுதிகள் தமிழக தேர்தல் களத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளன.

Please follow and like us:

You May Also Like

More From Author