உடல் நலம் பேணுவோம்.

உடல் நலம் பேணுவோம் !கவிஞர் இரா .இரவி

நாற்பது வயதைக் கடந்துவிட்டால்
நாக்கை கட்டுப்படுத்தக் கற்றுக் கொள்ளுங்கள்

உயிர் மீது உங்களுக்கு ஆசை இருந்தால்
உணவின் மீதான ஆசையை குறையுங்கள்

அதிக நாட்கள் வாழ வேண்டுமானால்
மிகக் குறைவாக உண்ணப் பழகுங்கள்

வயிறு முட்ட நிறைய சாப்பிடுவது
வாழ்நாளை குறைக்கும் என்பதை உணருங்கள்

சர்க்கரையில் மட்டுமே சர்க்கரை உள்ளது
சர்க்கரை தவிர்த்தால் போதுமென்பது தவறு

அரிசியிலும் சர்க்கரை உள்ளது அறிந்திடுங்கள்
அரிசிச் சாப்பாட்டை இரவில் தவிர்த்திடுங்கள்

உணவே மருந்து மருந்தே உணவு
உணவில் கொழுப்பு உயிருக்கு ஆபத்து

நீண்ட ஆயுளுக்கு முதல் எதிரி அசைவம்
நீடுழி வாழ்ந்திட அசைவத்தை அகற்றிடுங்கள்

நாள்தோறும் நடை பயிற்சி செய்யுங்கள்
நல்ல காற்றை வாங்கி நலமாக வாழுங்கள்

உணவு செரிக்கும் இயந்திரம் தான் வயிறு
ஒரு நாளாவது மாதத்தில் ஓய்வு கொடுங்கள்

மிச்சம் உள்ளது என்பதற்காக உண்ணாதீர்கள்
மிச்சங்களைப் போடும் குப்பைத் தொட்டியல்ல வயிறு

சர்க்கரை நோய் பற்றிய விழிப்புணர்வைப் பெறுங்கள்
சர்க்கரை நோய் இல்லாத சமுதாயம் காண வாருங்கள்

சர்க்கரையின் அளவு கூடுவதும் குறைவதும் உங்களால்
சர்க்கரை கூடாமல் உண்பது உங்கள் கடமை.

Please follow and like us:

You May Also Like

More From Author