பட்ஜெட் சிக்கல் காரணமாக தாமதமாகி வந்த விக்னேஷ் சிவனின் LIK – Love Insurance Kompany வரும் அக்டோபர் 17, 2025- தீபாவளிக்கு வெளியாகவுள்ளது.
இது குறித்த அறிவிப்பை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர்.
முன்னதாக LIK செப்டம்பர் 18 ஆம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
‘லவ் இன்சூரன்ஸ் கொம்பனி’ படத்தின் வெளியீட்டு தாமதத்திற்கு காரணம், தயாரிப்பு கட்டத்தில் பட்ஜெட் அதிகமாக இருந்ததாக ஊகிக்கப்படுகிறது.
ஆரம்பத்தில் ஒதுக்கப்பட்ட பட்ஜெட்டை மீறிச் சென்றதால் படத்தின் தயாரிப்பாளருடன் விக்னேஷ் ஷிவனிற்கு ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் என செய்திகள் தெரிவித்தன.
இந்த நிதி தகராறு படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகளில் தாமதம் ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது.
தற்போது சிக்கல்கள் நீங்கி படம் வெளியீட்டிற்கு தயாராகி விட்டது.
விக்னேஷ் சிவன்- பிரதீப் ரங்கநாதனின் LIK தீபாவளிக்கு வெளியாகிறது
