“2029-ல சம்பவம் இருக்கு!” – ஈரான் அணு ஆயுத விவகாரத்தில் கான் சாரின் அதிரடி கணிப்பு.. அதிர்ந்துபோன அமெரிக்கா.. இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ..!! 

Estimated read time 1 min read

ஈரான் மற்றும் இஸ்ரேல்-அமெரிக்கா இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ள சூழலில், பிரபல ஆசிரியர் கான் சாரின் பழைய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரான் நிபந்தனையின்றி சரணடைய வேண்டும் என்று எச்சரித்துள்ள நிலையில், ஈரான் ஒருபோதும் பணியாது என அதன் அதிபர் மசூத் பெசெஷ்கியான் தெரிவித்துள்ளார்.

இந்தச் சூழலில் வைரலாகும் வீடியோவில், ஈரான் ஏன் இதுவரை அணு ஆயுதங்களை உருவாக்கவில்லை என்பது குறித்து கான் சார் விளக்கியுள்ளார்.

ஈரான் ஏற்கனவே 80 சதவீதத்திற்கும் அதிகமான யுரேனியத்தை செறிவூட்டிவிட்டதாகவும், நினைத்தால் 2029-க்குள் அணுசக்தியில் முழு வலிமை பெற்றுவிட முடியும் என்றும் அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.

இந்தத் தாமதத்திற்கு ரஷ்யாவே முக்கிய காரணம் என்று கான் சார் அந்த வீடியோவில் கூறியுள்ளார். உக்ரைன் போரில் பிஸியாக இருக்கும் ரஷ்யா, இப்போதைக்கு அணு ஆயுத சோதனையில் ஈடுபட வேண்டாம் என்றும், ஏதேனும் நெருக்கடி ஏற்பட்டால் தங்களால் உதவ முடியாது என்றும் ஈரானிடம் கூறியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

View this post on Instagram

A post shared by motivone.in (@motivone.in)

“>

மேலும், இந்தியாவுக்கு ஈரான், ரஷ்யா, இஸ்ரேல் ஆகிய மூன்று நாடுகளுமே நண்பர்கள் தான் என்று குறிப்பிட்ட அவர், காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி என்பதை பாலஸ்தீன மக்கள் எப்போது பகிரங்கமாக ஒப்புக்கொள்கிறார்களோ, அன்றே அவர்களுக்குத் தனது முழு ஆதரவு கிடைக்கும் என்றும், தனக்கு எப்போதும் நாடே முதல் என்றும் அந்த வீடியோவில் மாணவர்களிடம் பேசியுள்ளார்.

Please follow and like us:

You May Also Like

More From Author