டி20 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணிக்கு ரூ.131 கோடி பரிசு அறிவித்தது பிசிசிஐ  

Estimated read time 0 min read

அகமதாபாத்தில் நடைபெற்ற 2026 டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி, சாம்பியன் பட்டத்தைத் தக்கவைத்த இந்திய கிரிக்கெட் அணிக்கு பிசிசிஐ ₹131 கோடி ரொக்கப் பரிசை அறிவித்துள்ளது.
இது பிசிசிஐ வரலாற்றிலேயே ஒரு அணிக்கு வழங்கப்படும் மிக உயர்ந்த பரிசுத் தொகையாகும்.
கடந்த 2024 ஆம் ஆண்டு ரோகித் சர்மா தலைமையில் இந்தியா உலகக்கோப்பையை வென்றபோது ₹125 கோடி வழங்கப்பட்டது.
தற்போது சூர்யகுமார் யாதவ் தலைமையில் தொடர்ந்து இரண்டாவது முறையாக கோப்பையை வென்று வரலாற்று சாதனை படைத்ததால், அந்தத் தொகையை ₹131 கோடியாக உயர்த்தி பிசிசிஐ தனது முந்தைய சாதனையை முறியடித்துள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author