சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கின் மனைவியும், பெண் குழந்தை மற்றும் பெண்களின் கல்வியை முன்னேற்றுவதற்கான யுனெஸ்கோ அமைப்பின் சிறப்புத் தூதருமான பொங் லியுவான் 29ஆம் நாள் சீன-ஆப்பிரிக்க மகளிர் மன்றக்கூட்டத்தில் காணொளி வழியாக உரை நிகழ்த்தினார்.
அப்போது பொங் லியுவான் கூறுகையில், மகளிர், சீனா மற்றும் ஆப்பிரிக்காவின் நட்பார்ந்த பெரிய குடும்பத்தின் முக்கிய உறுப்பினர் ஆவர். மகளிர் லட்சியத்தின் வளர்ச்சிக்குச் சீனாவும் ஆப்பிரிக்காவும் பெரும் முக்கியத்துவம் அளித்துள்ளன. மேலும் மகளிர் லட்சியத்தின் வளர்ச்சியை முன்னேற்றுவிக்கும் பாதையில் சீனாவும் ஆப்பிரிக்காவும் ஒன்றாக முயற்சிக்கும் கூட்டாளியாகும்.
தற்போது, மகளிர் லட்சியத்தின் வளர்ச்சியில் பல அறைக்கூவல்கள் எதிர்கொள்ளப்படுகின்றன. முன்பு இருந்ததை விட, நாம் மேலும் ஒற்றுமை மற்றும் ஒத்துழைப்புடன் செயல்பட வேண்டும். பல்வேறு தரப்புகளின் கூட்டு முயற்சியுடன் பெண்களின் பன்முக வளர்ச்சியை முன்னேற்றுவதற்கும், புதிய யுகத்தில் பகிர்வு எதிர்காலம் கொண்ட சீன-ஆப்பிரிக்க சமூகத்தின் கட்டுமானத்தை முன்னேற்றுவதற்கும் அனைவருடன் சேர்ந்து கூட்டாக பாடுபட விரும்புகிறேன் என்றார். சீன-ஆப்பிரிக்க மகளிர் மன்றக்கூட்டம் அன்று ஹூநான் மாநிலத்தின் சாங்ஷா நகரில் துவங்கியது.