சென்னையில் ரூ.60,000 சம்பளத்துடன் அரசு வேலைவாய்ப்பு.! முழு விவரம் இதோ…

Estimated read time 1 min read

தமிழ்நாடு அரசு ஆட்சேர்ப்பு 2024 : TNTPO வேலைவாய்ப்பு அறிவிப்பின் படி, தமிழ்நாடு வர்த்தக ஊக்குவிப்பு அமைப்பு ஆட்சேர்ப்பு 2024 மூலம், ஒப்பந்த அடிப்படையில் உதவி பொறியாளர் மற்றும் சமூக ஊடக நிபுணர்கள் பதவிக்காக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பின்வரும் தகுதி நிபந்தனைகளை பூர்த்தி செய்யும் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் பதவிக்கு அதிகாரபூர்வ இணையதளமான https://www.chennaitradecentre.org/careers.php என்கிற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இந்த பணியில் சேர என்னென்ன தகுதி வேண்டும் எப்படி விண்ணப்பிக்கவேண்டும் என்பதற்கான விவரம் கீழே விவரமாக கொடுக்கபட்டுள்ளது.

முக்கிய தேதி : 

விண்ணப்பிக்க தொடங்கிய தேதி
24.07.2024

விண்ணப்பிக்க கடைசி தேதி
31.07.2024

கல்வி தகுதி :

உதவி பொறியாளர் : அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம், நிறுவனத்தில் சிவில் இன்ஜினியரிங் அல்லது ஸ்ட்ரக்சுரல் இன்ஜினியரிங் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்
சமூக ஊடக நிபுணர் : அரசாங்க அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம், நிறுவனத்தில்எம்பிஏ, பிஜி டிப்ளமோ, எம்ஏ, எம்எஸ்சி ஆகியவற்றில் மீடியா பப்ளிக் ரிலேஷன்ஸ், மாஸ் கம்யூனிகேஷன், கம்யூனிகேஷன்ஸ் மேனேஜ்மென்ட், மீடியா மற்றும் கேளிக்கை, விளம்பரம், பிஆர்/பட்டதாரி பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

காலியிட விவரங்கள் :

 உதவி பொறியாளர் – Assistant Engineer (Civil)
1

சமூக ஊடக நிபுணர் – Professional (Social media)
1

வயது வரம்பு :

மேற்கண்ட இரு பதிவுக்கும் அதிகபட்சமாக 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம் விபரம் :

ஒப்பந்த அடிப்படையில் உதவி பொறியாளர் மற்றும் சமூக ஊடக நிபுணர்கள் பதவிக்கு  ரூ.60,000 மாத சம்பளமாக வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை :

இரு பதவிக்கும் விண்ணப்பதாரர்கள் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து உரிய சான்றிதழ்களுடன் இணைத்து இமெயில் (E mail) மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

இமெயில் முகவரி :

careers@chennaitradecentre.org என்கிற மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Please follow and like us:

You May Also Like

More From Author