சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி பொதுச் செயலாளரும், அரசுத் தலைவரும், மத்திய இராணுவ ஆணையத்தின் தலைவருமான ஷிச்சின்பிங் ஜூலை 28ஆம் நாள், சீனாவின் வெள்ளத் தடுப்புப் பணி குறித்து முக்கிய உத்தரவிட்டார்.
சமீபத்தில், வட கிழக்கு பிரதேசம் உள்ளிட்டவற்றில் கடும் மழை பெய்து, வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச் சரிவு ஏற்பட்டது. பெய்ஜிங், ஜிலின், சாங்தோங் முதலிய பகுதிகளில் கடும் பாதிப்பு ஏற்பட்டதோடு பலர் உயிரிழந்தனர். வெள்ளத் தடுப்புப் பணியை சீராக நடைமுறைப்படுத்தி, காணாமல் போனவர்களைத் தேடும் பணியை விரைவுபடுத்தவும், பேரழிவால் பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாப்பான இடங்களில் குடியமர்த்தி, பெரிய அளவில் உயிரிழப்பை தடுக்க வேண்டும். மக்களின் உயிர் மற்றும் சொத்து பாதுகாப்பை இயன்றளவில் பாதுகாக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.
தவிர, பெய்ஜிங் மாநகரின் மியுன் மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி பலர் உயிரிழந்தனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாப்பான இடங்களில் குடியமர்த்த வேண்டும் என்று சீனத் தலைமையமைச்சர் லீச்சியாங் உத்தரவிட்டார்.