நீண்டகாலமாக மேலை நாடுகளின் நவீனமயமாக்கப் பாதை உலகளாவிய தொழில்மயமாக்கத்தையும், உலகமயமாக்க போக்கையும் முன்னேற்றி, மனிதகுல நாகரிகத்தின் வளர்ச்சிக்கு பங்காற்றியுள்ளது. ஆனால் இந்தப் பாதை முக்கியமாக இருந்தபோதிலும், நவீனமயமாக்கத்துக்குச் செல்லும் ஒரேயொரு பாதையாக விளங்கவில்லை. உண்மையிலே நவீனமயமாக்கத்துக்கு எந்த நாட்டிலும் பயன்படுத்தப்படக் கூடிய நிலையான மாதிரி இல்லை.
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி ஆயிரக்கணக்கான ஆண்டுகால கலாசாரங்களைப் பின்பற்றி, தனது நிர்வாக அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டு, நாட்டின் நிலைமைக்கிணங்க, மக்களே முதன்மை என்ற மைய விழுமியத்தை உருவாக்கியுள்ளதோடு, நவீனமயமாக்கம் மேற்கதியமயமாக்கத்துக்குச் சமம் என்ற தவறான கருத்தைத் தகர்த்துள்ளது.
மக்களே முதன்மை என்ற கருத்தின் பயன்கள், சீன மக்களின் வாழ்க்கையில் காணப்படுகின்றன. மக்கள் வாழ்க்கை கட்டுமானத்தில் வளர்ந்த நாடுகள் நூற்றுக்கணக்கான ஆண்டுகால முயற்சியுடன் பெற்ற வளர்ச்சியை சீனா சில தசாப்தங்களில் பெற்று, தொலைதூர மலைப் பகுதிகளில் வாழும் மக்களுக்கு மின்சாரம், இணையச் சேவை, அடிப்படை மருத்துவ காப்புறுதி ஆகியவை கிடைக்கச் செய்துள்ளது.
மக்களே முதன்மை, ஷிச்சின்பிங் சிந்தனை முறைமையில் மைய கருத்தாக, மக்களை மையமாக கொண்ட மார்க்சிசத்தை பின்பற்றுவதோடு புத்தாக்கத்துடன் வளர்க்கிறது. புதிய யுகத்தில் சீனாவின் நிர்வாக அமைப்புமுறையில் மக்களே முதன்மை என்பது, அனைத்து துறைகளிலும் உறுதியான விழுமிய அளவீடு ஆகும். இக்கருத்தின் நடைமுறை மதிப்பு, சீனாவைத் தாண்டி, உலகளாவிய நிர்வாகத்துக்கும் புத்தம் புதிய சாத்தியமான வழி ஒன்றை வழங்கியுள்ளது.
