புதிய பொதுக் கருத்துக்களை எட்டியுள்ள சீனாவும் அமெரிக்காவும்

Estimated read time 0 min read

சீன வணிக அமைச்சகத்தைச் சேர்ந்த சர்வதேச வர்த்தகப் பேச்சுவார்த்தை பிரதிநிதியும், துணை வணிக அமைச்சருமான லீ ச்செங்காங் 16ஆம் நாள் கூறுகையில், சீனாவும் அமெரிக்காவும் பிரான்ஸின் பாரிஸ் நகரில், மனம் திறந்த, ஆழமான மற்றும் பயனுள்ள கலந்தாய்வு நடத்தி, சில பிரச்சினைகள் குறித்து புதிய பொதுக் கருத்துக்களை எட்டியுள்ளன என்றார்.

மேலும், புதிய நிலைமையில் இரு தரப்புகளின் சுங்க வரி அளவு, இரு தரப்புச் சுங்க வரி மற்றும் சுங்க வரி சாரா நடவடிக்கைகளுக்கான ஒத்திவைப்பு உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து இரு தரப்பும் விவாதம் நடத்தின. இரு தரப்புப் பொருளாதார மற்றும் வர்த்தக உறவின் நிதானத்தை நிலைநிறுத்த இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டதோடு, இரு தரப்பு வர்த்தக முதலீட்டு ஒத்துழைப்புகளை முன்னேற்றுவதற்கான செயல் முறையின் உருவாக்கம் பற்றி விவாதித்துள்ளனர் என்றும் லீ ச்செங்காங் தெரிவித்தார்.

Please follow and like us:

You May Also Like

More From Author