சீன-வியட்நாம் 3+3 நெடுநோக்கு பேச்சுவார்த்தை அமைப்பு முறையின் முதலாவது அமைச்சர் நிலை கூட்டம்

Estimated read time 1 min read

வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி பொதுச் செயலாளர் டோ லாம், மார்ச் 16ம் நாள் ஹனொய் நகரில், சீன வெளியுறவு அமைச்சர் வாங்யீ, சீனக் காவற்துறை அமைச்சர் வாங் ஷியோ ஹுங், தேசியப் பாதுகாப்புத் துறை அமைச்சர் டுங் ஜுயுன் ஆகியோரைச் சந்தித்துரையாடினார்.

அப்போது டோ லாம் கூறுகையில், பதற்றமான உலகில் ஆதாரத் தூண்ணாக சீனா திகழ்ந்து வருகிறது. சீனாவுடனான தூதாண்மையுறவுக்கு வியட்நாம் எப்போதும் முன்னுரிமை கொடுத்து வருகிறது. வியட்நாம், ஒரே சீனா கொள்கையைப் பின்பற்றி, சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் வழங்கிய 4 உலக முன்மொழிவுகளுக்கு ஆதரவளித்து வருகிறது என்று தெரிவித்தார்.

வாங் யீ இக்கூட்டத்தில் கூறுகையில், சீனாவும் வியட்நாமும் உலகளவில் முதன்முறையாக உருவாக்கிய நெடுநோக்கு தொடர்பு மேடையான இந்த அமைப்பு முறை, பரஸ்பர அரசியல் நம்பிக்கை மற்றும் ஒத்துழைப்பில் இரு தரப்புகள் புதிய கட்டத்தில் காலடியெடுத்து வைத்து, நெடுநோக்கு முக்கியத்துவம் வாய்ந்த சீன-வியட்நாம் பொது எதிர்கால சமூகக் கட்டுமானத்தின் புதிய முன்னேற்றத்தைப் பெற்றுள்ளதைக் கோடிட்டுக் காட்டியது என்று தெரிவித்தார்.

சீன-வியட்நாம் தூதாண்மை, தேசியப் பாதுகாப்பு, காவல் ஆகிய துறைகளின் நெடுநோக்கு பேச்சுவார்த்தை அமைப்பு முறையின் முதலாவது அமைச்சர் நிலை கூட்டம் 16ம் நாள் ஹனொய் நகரில் நடைபெற்றது.

Please follow and like us:

You May Also Like

More From Author