சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் பொது செயலாளரும், அரசுத் தலைவருமான ஷி ச்சின்பிங், உலக நாகரிக பேச்சுவார்த்தை அமைச்சர் நிலையிலான கூட்டத்திற்கு வாழ்த்து செய்தி அனுப்பினார். இதில் அவர் கூறுகையில்,
பல்வகை நாகரிகங்கள் இந்த உலகத்தின் சாராம்சமாகும். செழுமையான நாகரிகமும், மனித குலத்தின் முன்னேற்றமும், நாகரிகங்களுக்கிடையிலான பரிமாற்றங்களைச் சார்ந்திருக்கின்றன என்பதை வரலாற்றில் அறிந்து கொள்ளலாம் என்றார்.
ஷி ச்சின்பிங் முன்மொழிந்த உலக நாகரிக முன்மொழிவு ஆற்றிய பங்குக்கு இக்கூட்டத்தில் கலந்துகொண்ட விருந்தினர்கள் உயர்வாக பாராட்டு தெரிவித்தனர். பல்வேறு அறைகூவல்களைச் சந்திக்கும் போது, சர்வதேச சமூகம் கைகோர்த்துக் கொண்டு, நாகரிக பேச்சுவார்த்தையை வலுப்படுத்தி, பல்வேறு நாடுகளின் மக்கள் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்வதற்கும் வேறுப்பட்ட நாகரிகங்கள் கூட்டாக செழுமையாகுவதற்கும் பங்காற்ற வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.