சீன மக்கள் குடியரசின் ஏற்றுமதி கட்டுப்பாட்டு சட்டம், சீன மக்கள் குடியரசின் இரட்டைப் பயன்பாட்டுப் பொருட்களின் ஏற்றுமதிக் கட்டுப்பாடு விதிமுறை ஆகியவற்றின்படி, தேசிய பாதுகாப்பு மற்றும் நலன்களைப் பேணிக்காத்து, அணு ஆயுதப் பரவல் தடுப்பு உள்ளிட்ட சர்வதேசக் கடமைகளை நிறைவேற்றும் விதம், அவியோக்ஸ் உள்ளிட்ட 10 அமெரிக்க நிறுவனங்கள், ஏற்றுமதிக் கட்டுப்பாடு மற்றும் தடைப் பெயர் பட்டியலில் சேர்க்கப்படுவதாக சீன வணிக அமைச்சகம் முடிவு செய்துள்ளது. அத்துடன், இந்த 10 நிறுவனங்களுக்கு இரட்டைப் பயன்பாட்டுப் பொருட்களை ஏற்றுமதி செய்வதற்குத் தடை விதிப்பதாகவும், எந்த நாடு மற்றும் பிரதேசத்தின் அமைப்புகளும் தனிநபரும், சீனாவில் தயாரிக்கப்படும் இரட்டைப் பயன்பாட்டுப் பொருட்களை இந்த 10 நிறுவனங்களுக்கு வழங்குவதற்கு தடை விதிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
