உலக அளவில் நிலவி வரும் போர்ச் சூழல் காரணமாக இந்தியாவில் பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படலாம் எனப் பரவி வரும் வதந்திகளுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
“நாட்டில் எந்தப் பிரச்சினையும் இருக்காது; எண்ணெய் மற்றும் எரிவாயுவுக்குப் பற்றாக்குறை இல்லை” என்று அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
வதந்திகளை நம்பி பொதுமக்கள் தேவையற்ற பீதி அடைய வேண்டாம் என்றும், அரசை முழுமையாக நம்பலாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். மேற்கு ஆசியாவில் நிலவும் போர் பதற்றம் குறித்துப் பேசிய அவர், “இந்தியா எந்தப் போரிலும் தலையிட விரும்பவில்லை. அதே நேரத்தில், இந்தப் போர் நெருக்கடியால் ஏற்படும் பொருளாதாரச் சுமையை மற்ற நாடுகளைப் போல மக்கள் மீது சுமத்தாமல், மத்திய அரசு தன் மீது ஏற்றுக்கொண்டுள்ளது” என்று பெருமிதத்துடன் கூறினார்.
உலக நாடுகளே எரிபொருள் விலையேற்றத்தால் திணறி வரும் வேளையில், இந்திய மக்களுக்குப் பாதிப்பு ஏற்படாமல் இருக்க அரசு எடுத்துள்ள இந்த அதிரடி நடவடிக்கைகள் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.
